கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3271 days ago
கரூர்: பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, நேற்று, கரூர் நகரில், ஈஸ்வரன் கோவில், நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், புன்செய் தோட்டக்குறிச்சி மேட்டுப்பாளையம் சிவன் கோவில், குளித்தலை கடம்பர் கோவில், அய்யர்மலை சிவன் கோவில். ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லீஸ்வரர் கோவில், மண்மங்கலம் மரகதவள்ளி அம்பிகை மணிகண்டேஸ்வரர் கோவில், உட்பட பல்வேறு கோவில்களில் நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. அதேபோல், உப்பிடமங்கலத்தில் உள்ள கிளிசேர் மொழிமங்கை உடனுறை அடியார்க்கு எளியர் சிவன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.