உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் : விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் : விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சவுமியநாரயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் மார்ச் 3 ல் துவங்கியது. நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. நேற்று காலை 6:10 மணிக்கு தங்கப் பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் தேவியருடன் தெப்ப மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். பெண்கள் குளக்கரையைச் சுற்றிலும் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12:00 மணிக்கு பகல் தெப்ப உற்சவம் நடந்தது. பக்தர்கள் ஓம் நமோ நாராயணா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவிலும் தெப்ப உற்சவம் நடந்தது. இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !