பரிமள ரெங்கநாதர் தீர்த்தவாரி: பக்தர்கள் கடலில் புனித நீராடி தரிசனம்
ADDED :3471 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை, திருவிழந்தூரில் 108 வைணவ திவ்ய தேசத்தில் பரிமளரெங்கநாதர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மாசிமகத்தை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பெருமாள் மேள தாளம் முழங்கிட, காலை பூம்புகார் காவிரி கடலோடு சங்கமிக்கும் சங்கமத் துறைக்கு வந்ததார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் கடலில் இறங்க தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் கடலில் புனித நீ ராடினர். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீதர் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தனர்.