உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை:  மாசி மகத்தையொட்டி திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம் நதிக்கரையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தொட்டி கட்டி  பலத்த பாதுகாப்புடன்  அண்ணாமலையாருக்கு “சூலம் ரூபத்தில்” தீர்த்தவாரி நடந்தது.

விழாவில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். நதிக்கரையில் பலத்த பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே பக்தர்களை போலீஸார் அனுமதித்தனர்.  இதில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனிதநீராடி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !