உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை நத்தம் மாரியம்மன் பூக்குழி திருவிழா

நாளை நத்தம் மாரியம்மன் பூக்குழி திருவிழா

நத்தம்: நத்தத்தில் மாரியம்மன் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நாளை பூக்குழி இறங்குகின்றனர். கடந்த பிப்., 27 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் கோயிலில் இருந்து சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். அன்று முதல் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பல்வேறு வாகனங்களில் அம்மன் உலா சென்றார். இன்று அரண்மனை பொங்கல், மாவிளக்கு மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலையில் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுக்கின்றனர். பகலில் கழுமரம் ஏறுதலை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !