உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னைகாமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அன்னைகாமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வால்பாறை: வால்பாறை அன்னைகாமாட்சி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை வாழைத்தோட்டம் அன்னை காமாட்சி அம்மன் கோவிலின், 49ம் ஆண்டு திருவிழா கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு சுப்பிரமணியசுவாமி கோவிலிருந்து, அம்மனுக்கு திருமணசீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது. பின் காலை, 11.30 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !