ஷீரடி சாய்பாபா கோவிலில் சங்காபிஷேக விழா
ADDED :3140 days ago
திருப்பூர்: திருப்பூர், ஷீரடி சாயிபாபா கோவிலில் இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி, சங்காபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருப்பூர், பலவஞ்சிபாளையத்தில் உள்ள ஷீரடி சாயிபாபா கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, செண்டை வாத்தியம் முழங்க,. சாய்பாபா மகான், பல்லக்கில், ஊர்வலமாக சென்று, பக்தர்களை ஆசீர்வதித்தார். நேற்று காலை பவுர்ணமி திதி, மங்கள இசையுடன் விக்னேஷ்வரா பூஜை, கணபதி ஹோமம், மஹா தீபாராதனை நடந்தது. அதன்பின், 108 சங்காபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.