உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷத்துடன் பூண்டியில் தேரோட்டம்

அரோகரா கோஷத்துடன் பூண்டியில் தேரோட்டம்

அவிநாசி: பூண்டியில், சண்முகநாதர் தேரோட்டம், ‘அரோகரா’ கோஷம் முழங்க, நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்து வரும், தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம், திருமுருகநாதசுவாமி தேரோட்டம் நடந்தது. நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர், மாலை, 6:00 மணிக்கு நிலையை அடைந்தது. அதன்பின், சண்முகநாதர் தேரோட்டம் நடந்தது. கோவில், நுழைவாயில் முன், தேர் நிறுத்ப்பட்டது. மீண்டும், தேரோட்டம், நேற்று, மாலை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷமிட்டவாறு, வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவில், இன்று மாலை, 6:00 மணிக்கு, தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. நாளை, சுந்தரர் வேடுபறி திருவிழா, 15ல், தரிசன காட்சியும் நடக்கிறது. வரும், 16ல்,  மஞ்சள் நீர், மயில் வாகன காட்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !