முத்துமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3139 days ago
வால்பாறை: லோயர்பாரளை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. வால்பாறை அடுத்துள்ள லோயர்பாரளை எஸ்டேட் முத்துமாரியம்மன் கோவிலின், 46ம் ஆண்டு திருவிழா கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் காலை அம்மனுக்கு பொங்கல்வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அம் மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. திருவிழா வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.