உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் சூரசம்ஹாரம்

குன்றக்குடியில் சூரசம்ஹாரம்

காரைக்குடி : கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது. அக்.26ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. 6ம் நாள் நிகழ்ச்சியான நேற்று மதியம் 1.30 மணிக்கு மலையில் இருந்து அடிவாரத்திற்கு வேல் கொண்டு வரப்பட்டு, மாலை 4 மணிக்கு பார்வதி தேவியிடம் "வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து சுவாமி மாலை 5 மணிக்கு வெள்ளி ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. இன்று திருக்கல்யாணம்: மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாத பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !