காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் தவன உற்சவம்
ADDED :3242 days ago
காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், கோடை கால துவக்கத்தில் தவன உற்சவம் நடைபெறும். நேற்று மாலை, பெருமாள், பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் கண்ணாடி அறையில் இருந்து, கோவில் வளாகத்தில் உள்ள தவன மண்டபத்தில், வரதராஜர் எழுந்தருளினார். அங்கு, முதல் நாள் ஆராதனை மற்றும் பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.