மாமல்லபுரத்தில் இருளர்கள் கொண்டாட்டம்
ADDED :3144 days ago
மாமல்லபுரம்: குலதெய்வ வழிபாட்டிற்காக வந்த இருளர்கள், நேற்றும் மாமல்லபுரத்தில் தங்கினர். தமிழகம் மற்றும் ஆந்திர, கர்நாடக எல்லைப் பகுதி இருளர்கள், குலதெய்வம் கன்னியம்மனை, மாசி மக நாளில் வழிபட, ஆண்டுதோறும் மாமல்லபுரம் வருவர். தற்போதும், மாசி மகத்தை முன்னிட்டு, முதல் நாளே இங்கு குவிந்தனர். மகத்தன்று காலை, கடலில் நீராடி, கடற்கரையில் கன்னியம்மனை வழிபட்டு, வேண்டுதல்களை நிறைவேற்றினர்.நேற்று, குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும், சந்தோஷமாக பேசி மகிழ்ந்தனர். மணல்வெளியில் விளையாடினர். தற்காலிக கடைகளில், விரும்பிய பொருட்களை வாங்கினர். இன்று, அனைவரும், அவரவர் பகுதிக்கு திரும்புவர். நெரிசல் இன்றி, எளிதாக செல்ல, அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.