உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாநகரில் ஹோலி பண்டிகை கோலாகலம்: முகங்களில் சாயம்; உள்ளங்களில் குதூகலம்

மாநகரில் ஹோலி பண்டிகை கோலாகலம்: முகங்களில் சாயம்; உள்ளங்களில் குதூகலம்

ஈரோடு: மாநகரில் ஹோலி பண்டிகையை, வட மாநில மக்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இந்தியை தாய் மொழியாக கொண்ட வடமாநில மக்களின், வசந்த விழாவாக ஹோலி பண்டிகை வர்ணிக்கப்படுகிறது. நாடு முழுவதும், இப்பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் இந்திரா நகர், வளையக்கார வீதி, திருநகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் முகங்களில் சாயம் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீரான் மைதீன் வீதியில், தொட்டிகள் அமைத்து அதில் கலந்து வைத்த வண்ண சாயக்கலவை நீரை தெளித்து விளையாடினர். அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்கு இனிப்பு பதார்த்தங்களை கொடுத்தும், வட மாநில மக்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் மாவட்டத்தில் வட மாநிலத்தவர் வசிக்கும் பகுதிகளில், ஹோலி நேற்று கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !