திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்
மதுரை: மதுரை, திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, மார்ச் 12ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்பாடாகி, யோகநரசிங்கப் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். நரசிங்கப் பெருமாள் கோயிலில் அன்று இரவு மோகினி திருக்கோலத்துடன் தைலக்காப்பும், சுவாமி பக்தி உலாவும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று (மார்ச் 13ல்) காலை கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் தெப்பக்குளம் அருகேயுள்ள நான்கு கால் மண்டபத்தில் அருள்பாலித்தார் . அங்கு கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி மீண்டும் திருமோகூர் சென்றார் . விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆர்.இளையராஜா மற்றும் செயல் அலுவலர் ஆர்.ஞானசேகரன் ஆகியோர் செய்துள்ளனர்.