திருப்பூர் திருமுருகநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :3138 days ago
திருப்பூர்: திருப்பூர் திருமுருகநாத சுவாமி கோவில் தேர் திருவிழாவில், தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர், திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் 11 மற்றும் 12ம் தேதி திருமுருகநாத சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (மார்.13ல்) மாலை 6 மணிக்கு கோவிலையொட்டி உள்ள மகாமக குளத்தில் தெப்பத்தேர் உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.