பழநி மாரியம்மன் கோயில் விழா 2,511 குடங்களில் பாலபிஷேகம்
ADDED :3142 days ago
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 2,511 பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர்.
பழநி வ.உ.சி.,மன்ற தலைமையகம் சங்கம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து 2,511 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன்கோயிலை அடைந்தது. உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. 64 ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் சார்பில், உற்சவ சாந்தி விழா நடந்தது. சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்தனர். சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, செந்தில்குமார், ஆர்.வி.எஸ்., பெருமாள், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மற்றும் நகரமுக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.