அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டு
ADDED :3135 days ago
அந்தியூர்: அந்தியூரில் பிரசித்தி பெற்ற, பத்ர காளியம்மன் கோவில், குண்டம் மற்றும் தேர் திருவிழா, பூச்சாட்டுதலுடன் நாளை (16ம் தேதி) தொடங்குகிறது. இதை தொடர்ந்து, 23ல் கொடியேற்றம் நடக்கிறது. விழா முக்கிய நிகழ்வான தீ மிதிக்கும் நிகழ்ச்சி, ஏப்.,5ல் நடக்கிறது. இதை தொடர்ந்து, 8, 9, 10 தேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதை கோவில் செயல் அலுவலர் பலமுருகன் தெரிவித்துள்ளார். தீ மிதி விழாவில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.