உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவிலில் நன்கொடை சீட்டு அறிமுகம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் நன்கொடை சீட்டு அறிமுகம்

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலை புனரமைக்க, அரசு, 2.80 கோடி ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணி, இரு மாதங்களாக முழுவீச்சில் நடக்கிறது. தற்போது நடக்கும் திருப்பணிக்களுக்கான செலவினம், கோவில் வருமானத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில், அப்பணிகளை சிறப்பாக செய்ய, மக்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. செயல் அலுவலர் மாலா கூறியதாவது: திருப்பணிகளில், மக்களும் பங்கெடுக்கும் வகையில், நன்கொடை சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மதிப்பு, ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம், 10 ஆயிரம், 5,000, 2,000, 1,000 ரூபாய் மதிப்பில் அச்சடிக்கப்பட்டுள்ளது. நன்கொடை அளிக்க விரும்புவோர், அலுவலகத்தில் உள்ள சீட்டுகளில், தங்களுக்கு தேவையானவற்றை பணம் செலுத்தி பெற்று, அதை பூர்த்தி செய்து, கோவில் நிர்வாகத்திடம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !