உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா; 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா; 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, வரும், 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா, வரும், 22ம் தேதி கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 23ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தினமும், மூலவர்அம்மனுக்கு, காலை, 8:00 மணிக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 29ல், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் மற்றும் இரவு வீதியுலா நடைபெறுகிறது. வரும், 31ல், சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம்; ஏப்., 9ல், காலை துரியோதனன் படுகளம், மாலை, 6:30 மணிக்கு தீமிதி திருவிழா, ஏப்., 10ல், காலை, 11:00 மணிக்கு தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.

தேதி    நேரம்    உற்சவம்

மார்ச் 23    காலை, 6:30 மணி    கொடியேற்றம்
24    காலை, 8:00 மணி    அம்மன் காசிநாதபுரம் புறப்படுதல்
25    காலை, 8:00 மணி    மூலவர் அபிஷேகம்
26    காலை, 8:00 மணி    தர்மர் பிறப்பு, மூலவருக்கு அபிஷேகம்
27    மாலை, 6:00 மணி    அம்மன் தொட்டில் வைபவம்
28    காலை, 8:00 மணி    அம்மன் வேலஞ்சேரி கிராமத்திற்கு புறப்படுதல்
29    காலை, 10:00 மணி    திரவுபதியம்மன் திருக்கல்யாணம்
30    காலை, 7:00 மணி    அம்மன் முருக்கம்பட்டு கிராமத்திற்கு புறப்படுதல்
31    காலை, 11:00 மணி    சுபத்திரை திருக்கல்யாணம், இரவு, 8:00 மணி    புஷ்ப பல்லக்கு உற்சவம்

ஏப்., 1    காலை, 8:00 மணி    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
2    இரவு, 8:00 மணி    ராஜசூய யாகம் உற்சவம், கண்ணபிரான் வீதியுலா
3    காலை, 10:00 மணி    அர்ஜூனன் தபசு, உற்சவம்
4    காலை, 7:00 மணி    மூலவர் அபிேஷகம், சந்தன காப்பு
5    மாலை, 6:00 மணி உத்திரை பசுக்கள் பாதுகாப்பு போர்
6    மாலை, 6:30 மணி    கிருஷ்ணன் துாது, கருடாழ்வார் காட்சி
7    இரவு, 7:00 மணி    அலகு நிறுத்துதல்
8    இரவு, 7:30 மணி-    மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருவீதியுலா
9    காலை, 8:45மணி    துரியோதனன் படுகளம், மாலை, 6:30 மணி    தீமிதி திருவிழா
10    காலை, 11:00 மணி    தர்மர் பட்டாபிேஷகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !