முல்லைக்குளம் கருப்பணச்சாமி கோயில் பங்குனி உற்சவ விழா
ADDED :3120 days ago
மானாமதுரை : மானாமதுரை அருகே முல்லைக்குளம் கருப்பணச்சாமி, அக்னி வீரபத்ரசாமி கோயில் பங்குனி உற்சவ விழா நடந்தது. கிராம மக்கள் முத்தனேந்தல் வைகை ஆற்றில் கரகம் எடுத்து வந்து, கருப்பணச்சாமி வேடமணிந்து சாமியாட்டம் ஆடினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. கருப்பணசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.