உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் சீரமைப்பு துவக்கம்

காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் சீரமைப்பு துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் சீரமைக்கும் வேலை துவங்கியுள்ளது. தரையில் கல் பதித்து, கோவில் விமானத்தில் சிதிலமடைந்தபகுதிகளை சீரமைக்கும் பணியும் நடக்க இருக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்­பரநாதர் சன்னிதி தெருவில், பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான சுரகரேஸ்வரர் கோவில் அமைந்துள்ள து. இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் பல்லவர்கள் காலத்தில் கட்­டப்­பட்­டதாக இருக்கும், பின்னர் வந்த மன்னர்கள் ஆட்சி காலத்தில் அதில் கூடுதல் வேல ைசெய்திருப்­பர்.இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட முழுமையான கோவிலாக கருதப்­படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவில் வளாகத்தில் மண் தரையில் கல் பதித்து,விமானத்தில் சிதிலமடைந்த சிற்­பங்களை பழமை மாறாமல் சீரமைக்கும் பணிதுவங்கியுள்ளது. இதில் முதலில் நுழைவு பகுதியில் இருந்து உள்ளே செல்லும் வழியில் கருங்கல் பதிக்கும் பணிக்காக சுண்ணாம்பு கலவை முதலில் பரப்பி, அதன் மேல் கருங்கல் பதிக்கப்­படுகிறது. கோவில் விமானத்தில் பல சிற்­பங்கள் உள்ளன. அவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும் நடக்க இருக்கிறது. இந்தபணி ஜூலை மாதத்திற்குள் முடித்து, அதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !