யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கருட சேவை கோலாகலம்
ADDED :3150 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோமளவல்லி தாயார் சமேத யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில், நேற்று, கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள கோமளவல்லி சமேத யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரமோற்சவம், செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்றைய உற்சவத்தில், காலை, 6:00 மணிக்கு யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அனுமந்த வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. டி.கே. நம்பி தெரு வழியாக, சுவாமி, வரதராஜப் பெருமாள் கோவில் வரை சென்று திரும்பினார். திங்கள் காலை, 5:00 மணிக்கு தேர் திருவிழா நடை பெறுகிறது. ஏப்., 2ம் தேதியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.