சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
மயிலாடுதுறை: சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலமாக நடைப்பெற்றது.
நாகை மாவட்டம் சீர்காழியில் ஆதி இராகு ஸ்தலமான பொன்னாகவல்லி சமேத நாகேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இங்கு அமிர்த இராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவோன நட்சத்திரத்தில் தம்பதி சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் வாசு கி பாம்பிற்கு காட்சி தரும் விழா நடைப்பெறும். இவ்வாண்டு திருக்கல்யாண உத்சவம் இன்று(மார்.24ல்) சிறப்பாக நடைப்பெற்றது. உத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள், இராகு பகவான், சுவாமிகளுக் கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து இராகு பகவான் வனத்திற்கு செல்லுதல், இராகு பகவானுக்கு காட்சி தரும் திருக் கல்யாண உத்சவம் நடந்தது. முன்னதாக செல்வவினாயகர் கோயிலிருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு வே தவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மங்கலநானை அம்மன் கழத்தில் அணிவித்து திருக் கல்யாணம் நடத்தி வைத்தனர். இதில் கோவி.நடராஜன், ரவி, பிரபாகரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று மொய் எழுதி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன் செய்திருந்தார். பூஜைகளை சிவாச்சாரியார்கள் முத்துக்குருக்கள், பஞ்சாபிகேசன், சுரேஸ் ஆகியோர் செய்திருந்தனர்.