திருமணத் தடைகள் நீங்கும் சுந்தேரஸ்வரர் கோயில்!
ADDED :3125 days ago
சென்னை: ஆவடி அண்ணனூர் ரயில் நிலையம் அருகில் கோயில் கொண்டிருக்கும், வட திருமணஞ்சேரி என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரி சமேத சுந்தேரஸ்வரர் கோயிலில் உள்ளது. இங்கு ஏப்ரல் 19 புதன்கிழமை அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை அணிவித்து பின் அந்த மாலைகள் கழுத்தில் அணிந்து கொண்டு சென்றால் இறைவனின் திருவருளால் அவ்வருடமே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.