உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் புஷ்ப யாகம்

திருப்பதி கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் புஷ்ப யாகம்

திருப்பதி: திருப்பதியை அடுத்த,  ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சபம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, துளசி, சாமந்தி, ரோஜா, சம்பங்கி, மருவம், தவனம் உள்ளிட்ட பலவண்ண மலர்களால் ஸ்ரீதேவி– பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு வேத மந்திரம் முழங்க  புஷ்ப யாகம் நடைபெற்றது. சுவாமிக்கு 5 டன் எடையுள்ள மலர்களால் மூன்று முறை புஷ்ப யாகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !