வல்லநாடு கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
ADDED :5133 days ago
வல்லநாடு:வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வந்த முருகன் ஆக்ரோசமாக சூரனை வதம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லநாடு பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்தனர்.