விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
விளாத்திகுளம்: விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்தகஷ்டி விழாவை முன்னிட்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினசரி கோயிலில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜையும், சுவாமி சண்முகர் வீதி உலாவும் நடந்தது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. காலை சிறப்பு பூஜையுடன் நடந்த சஷ்டி விழாவில் மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. சூரசம்ஹாரம் நான்கு ரதவீதிகள் சந்திக்கும் மார்க்கெட் அருகே நடந்தது. முதலில் கஜமுக சூரனை வதம் செய்த முருகன் பின்னர் சிங்கமுகம், சூரபத்மன் முகத்துடன் காட்சி தந்த சூரனை முருகன் வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் உமா மகேஸ்வரி, டவுன் பஞ்., தலைவி ஓவம்மாள், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், திருப்பணிக்குழுத் தலைவர் முருகேசன், முன்னாள் டவுன் பஞ்.,தலைவி புவனேஸ்வரி, சிங்கப்பூர் ராஜ்குமார், கோவில்பட்டி தொழிலதிபர் நாகஜோதி, வாசகர் பேரவைத் தலைவர் இளையராஜா, துணைத் தலைவர் குட்லக் குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.