சென்னிமலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், இன்று இரவு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை காலை பொங்கல் விழா நடக்கிறது. சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாட்கள் நடக்கிறது. நடப்பாண்டு அக்., 19ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 26ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி, காலை பூவோடு எடுத்தல் நடந்தது. தினமும், மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. கம்பத்துக்கு, மஞ்சள் நீர் ஊற்றி பெண்கள் வழிபடுகின்றனர்.இன்று இரவு மாவிளக்கு திருவீதி உலா நடக்கிறது. நாளை காலை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை முதலே பொங்கல் வைத்து, கிடாய், கோழி பலி கொடுத்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் உற்சவத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.* முருங்கத்தொழுவு ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்து வருகிறது. இன்று இரவு கம்பம் நடும் விழா நடக்கிறது. நவம்பர் 10ம்தேதி அதிகாலை தேர் வடம் பிடித்தல் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.