உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊழியரால் முதலாளிக்கு கெட்ட பெயர் கூடாது!

ஊழியரால் முதலாளிக்கு கெட்ட பெயர் கூடாது!

பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள் என்கிறது பைபிள். ஒரு கிறிஸ்து சபையில் இருந்த ÷ பாதகர்கள் பசி, பட்டினியுடன் நற்காரியங்கள் செய்து வந்தனர். அவ்வூரில் நடந்த  திருமணத்தின் போது ஏராளமான உணவு மீந்து விட்டது. அதை  போதகர்களுக்கு கொடுத்து அனுப்பினார் மணவீட்டார். அவர்கள் உணவு கொண்டு வந்தவரிடம், “ஐயா! இந்த உணவை நாங்கள் சாப்பிடுவதை விட,  இந்த ஊரில் ஏழைகளுக்கு கொடுங்கள்,” என்றனர். ஒரு ராஜாவிடம் வேலை செய்பவன் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. ராஜாவின்  அதிகாரி என்ற கவுரவம் வேண்டும். இல்லாவிட்டால், அந்த ஊழியன் செய்யும் தவறு,  ராஜாவுக்குத் தான் அவப்பெயரை உண்டாக்கும். அது÷ பாலவே இயேசு என்ற முதலாளியிடம், பணிபுரியும் போதகர்கள் அவரைப் போலவே, கஷ்டங்களை ஏற்க வேண்டும். தங்கள் கஷ்டத்தைப் பொரு ட்படுத்தக் கூடாது. அப்போஸ்தலர் பவுல், “ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடத்தையிலும், அன்பிலும்,  விசுவாசத்திலும், கற்பிலும் மாதிரியாய் இரு,” என்கிறார். ஆம்...ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு கெட்ட பெயர் உண்டாகும் வகையில் நடக்கக்  கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !