உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மை நோய்க்கு சந்தவெளி அம்மன் கோவிலுக்கு வருவோர் அதிகரிப்பு

அம்மை நோய்க்கு சந்தவெளி அம்மன் கோவிலுக்கு வருவோர் அதிகரிப்பு

காஞ்சிபுரம்:  அனைத்து நோய்களையும் குணமாக்க கூடிய வகையில்,நவீன சிகிச்சை முறை வந்தாலும், பல நுாறு ஆண்டுகளாக அம்மை நோய்க்கு, அம்மனை நினைத்து மருத்துவம் பார்க்கப்படுவது தொடர்கிறது. இதற்காக சந்தவெளி அம்மன் கோவிலில் நோய் குணமாக தங்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு வகை, ‘வைரஸ்’ கிருமி பாதிப்பால், அம்மை நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதை , அம்மன் என்ற பெண் கடவுளின் தாக்கம் என கருதும் நிலை, தமிழக கிராமங்களில் நிலவுகிறது. இதையடுத்து, அம்மனுக்கு பிடித்தமானதாக கருதப்படும், மஞ்சள்,வேப்பிலை போன்றவற்றை அரைத்து உடலில் ஏற்பட்டுள்ள கொப்பளங்களில் பூசுவர். பெரும்பாலும், மருத்துவ மனைகளுக்கு சென்று, சிகிச்சை பெறுவது கிடையாது.

காஞ்சிபுரம் வெள்ளகுளம் பகுதியில் உள்ள சந்தவெளி அம்மன் கோவிலில் தங்கி, நோய் குணமானதும் வீட்டுக்கு செல்வது இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோவிலில் இதற்காக தனி இடமே உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோவிலில் தங்கி அம்மை நோய் குணமானதும் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். அம்மை நோய் கோடை காலத்தில் தான் வரும் என்பதில்லை. இது ஒரு வகை வைரஸ் மூலம் வரக்கூடியது. ஒருவருக்கு வந்தால் மீண்டும் அவருக்கு வராது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. நோய் வராமல் தடுக்க , தடுப்பூசி உள்ளது. அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் வந்து, சிகிச்சை பெற வேண்டும். சாப்பாடு முறையில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. குளிர்ந்த பானங்கள் அதிகமாக குடிக்கலாம். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகிவிடும். ஆர்.பாஸ்கர், தோல் சிகிச்சை மருத்துவர், காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !