யதோக்தகாரி பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
காஞ்சிபுரம்: யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தில், தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள யதோக்தகாரி பெருமாள் வைணவ தலங்களில் சிறப்பு
பெற்று விளங்கி வருகிறது. 108 திவ்விய தேசத்தில் ஒன்றாகவும் உள்ளது. இந்த கோவில் பிரம்மோற்சவம் கடந்த வாரம், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனத்தில் புறப்பாடு நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முக்கிய உற்சவமான தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை, 5:45 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். 7:00 மணிக்கு தேர் புறப்பட்டது. சின்ன காஞ்சிபுரம் வரை சென்று, காலை, 9:30 மணிக்கு நிலைக்கு வந்தது.