காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி விழா 30ல் துவக்கம்
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும், 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்காக ராஜகோபுரம் எதிரில், பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும், விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, 30ம் தேதி காலை, 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. முதல் நாள் காலை பவளக்கால் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவில் முக்கிய உற்சவமான வெள்ளி அதிகார நந்தி சேவை, அறுபத்து மூவர் உற்சவம், அன்று இரவு வெள்ளித்தேர், தேர் திருவிழா, பங்குனி உத்திர திருக்கல்யாணம் போன்ற உற்சவம் விமர்சியாக நடைபெறும். ஏப்., 12ம் தேதியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடைகள் வைப்பதற்கு வசதிக்காக ராஜகோபுரம் எதிரில், 16 கால் மண்டபம் வரை பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடந்த, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழைய உற்சவர் சிலையே அனைத்து உற்சவத்திற்கும் பயன்படுத்தப் பட்டது. இந்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்கு முதன் முதலாக, புதிய உற்சவர் சிலை புறப்பாடு நடைபெறுகிறது.