உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விண்ணளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

விண்ணளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் : பெருந்தொழுவு ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும், 2ல் நடக்கிறது. திருப்பூர் அருகேயுள்ள பெருந்தொழுவில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளது. பெரியபெருமாளுக்கு கோபுரம், தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் சுவாமிக்கு கற் கோவில்கள் அமைத்து, பிரகாரம், சுற்றுச்சுவர், கருடகம்பம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவு பெற்றன. தனால், கும்பாபிஷேக விழா, வரும், 30ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு வாசுதேவ புண்யாஹவாசனம்; 31ல், முதல் கால யாக பூஜை; மாலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. ஏப்.,1ம் தேதி காலை, 8:00 மணிக்கு, நவரத்ன யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் மூன்றாம்கால யாக பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு, 81 கலச திருமஞ்சனம், கோ பூஜை, திருமூர்த்திகளின் திருக்கண் திறத்தல், நான்காம் கால யாக பூஜை நடக்கிறது.

ஏப்.,2ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாக பூஜை, யாத்ராதானம், தசதானம், கடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், 10:30 வரை, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா நிவேதனம், தச தரிசனம், திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமறை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !