கூடலுாரில் மழை வேண்டி ஊர்வலம்
ADDED :3466 days ago
கூடலுார்: கூடலுாரில் செல்வகாளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், மழைவேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.முன்னதாக பெண்களுக்கு கோலப்போட்டி, பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.