உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களை கட்டும் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா

களை கட்டும் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா

உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, குட்டை திடல் மைதானத்தில், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் கூட்டத்தால் களை கட்ட துவங்கியுள்ளது. உடுமலை மாரியம்மன் கோவிலில், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். நகர மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் திருவிழா நோன்பு சாட்டியதும், நாள்தோறும் கோவிலுக்கு வருகின்றனர். இவ்வாறு, வரும் மக்களுக்காக குட்டை திடல் மைதானத்தில், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படுகிறது. வருவாய்த்துறை சார்பில், ஆண்டுதோறும், இதற்காக ஏலம் விடப்படுகிறது. இந்தாண்டு, நோன்பு சாட்டுதலுக்கு முன்பே, மைதானத்தில், பல்வேறு கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டன. நேற்று கோவிலில் தேர்த்திருவிழாவுக்காக நோன்பு சாட்டப்பட்டது. இதையடுத்து, குட்டை திடல் மைதானத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து வகையான விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்ட பின்னர், குட்டை திடல் நாள்தோறும் களைகட்டும். இதே போல், அவ்வீதியில், தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !