சாய்ராம் கோவிலில் ராமநவமி திருவிழா
ADDED :3115 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் கோவிலில், ராம நவமி திருவிழா இன்று துவங்குகிறது. திருவள்ளூர், டவுன் பகுதியில் உள்ளது ஆனந்த சாய்ராம் கோவில். இங்கு, ராமநவமி திருவிழா, இன்று துவங்கி, ஏப். 7ம் தேதி வரை நடைபெறுகிறது. ராமநவமி திருவிழா, இன்று, காலை 5:00 மணிக்கு காகட ஆரத்தியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, காலை 7:15 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், மத்தியான ஆர்த்தி, துாப ஆரத்தியும் நடைபெறும். பின், 31ம் தேதி, காலை 7:00 மணிக்கு, ராமநவமி திருவிழா கொடியேற்றுதல் நடைபெறும். தொடர்ந்து 7ம் தேதி வரை, தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் பஜனைகள் நடைபெறும்.