மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் திருவிழா
ADDED :3115 days ago
திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் மாசி களரி திருவிழா மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்றது மாரநாடு கருப்பண்ணசாமி மாசி களரி திருவிழா. திருப்பாச்சேத்தியை சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கு காவல் தெய்வமான இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மார்ச் 31ம் தேதி இரவு ஏழு மணிக்கு பொங்கல் வைபவமும், இரவு 11:00 மணிக்கு சாமியாட்டமும் நடைபெறும். விடிய விடிய நடைபெறும் விழாவிற்கு மதுரை, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்புபேருந்துகளை இயக்குகிறது.