உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றீஸ்வரர் ஆலய மண்டபம் வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

தான்தோன்றீஸ்வரர் ஆலய மண்டபம் வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

பெத்தநாயக்கன்பாளையம்: வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் மண்டபத்தில், வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் பஞ்சப்பூத தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, விழாக்காலங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விரைவில், கும்பாபி?ஷகம் நடக்கவுள்ள நிலையில், கோவில் முன்புறம் மண்டபம், நாலுகால்மண்டபம் உள்ளிட்டவைகளுக்கு வண்ணம் தீட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பூம்புகாரை சேர்ந்த வண்ணம் தீட்டும் கலைஞர் நாகராஜன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஒரு மாதமாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !