மணக்குள விநாயகர் கோவிலில் ஏப்., 9ல் சஹஸ்ர சங்காபிஷேகம்
ADDED :3117 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், ஏப்., 9-ம் தேதி மஹா கும்பாபிஷேகத்தின் ௨ம் ஆண்டு சஹஸ்ர சங்காபிஷேக விழா நடக்கிறது. விழாவையொட்டி, ஏப். 8-ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடக்கிறது. 9-ம் தேதி காலை 7.௦௦ மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை 11.௦௦ மணிக்கு யாத்ராதானம், கலச புறப்பாடு, மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம், துாபதீப நைவேத்திய சோடசோபசார தீபாராதனை, இரவு 7.௦௦ மணிக்கு உற்சவ மூர்த்தி வீதி உலா நடக்கிறது. இத்தகவலை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.