உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாமகிரிப்பேட்டை: போத்தகாப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை துவங்குகிறது. நாமகிரிப்பேட்டை அடுத்த, அரியாகவுண்டம்பட்டி, போத்தகாப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஏப்., 2ல் நடக்கிறது. முன்னதாக கும்பாபிஷேக விழா நாளை (மார்ச், 31) துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு கோபுரத்துக்கு தானியம் நிரப்புதல், கோபுர சிலைகளுக்கு கண் திறப்பு விழா நடக்கிறது. வரும், 1 காலை, 8:00 மணிக்கு காவிரி தீர்த்தம், முளைப்பாரி, கோபுர கலசங்களுடன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரத்துடன் முதல்கால யாக பூஜை துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு அன்னதானம், 10:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 2 அதிகாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம், 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !