உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு

சின்னசேலம்: சின்னசேலத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு தெலுங்கு வருட யுகாதி விழாவையொட்டி, சந்தன காப்பு அலங்காரம் செய்து, வழிபட்டனர். நேற்று காலை, அம்மனுக்கு 17 வகையான அபிஷேகம் செய்து, கட்டளைதாரர் கோபால் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வைத்தார். கணேஷ்சர்மா மகா தீபாராதனை செய்தார். இதில் திரளான ஆர்ய வைசிய சமூகத்தினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !