உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியானூரில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

அரியானூரில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

வீரபாண்டி: அரியானூரில், கோவில் விழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. சேலம், அரியானூர், மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு ஏராளமான சிறுவர், சிறுமியர், வேண்டுதலுக்காக தங்கள் உடலில் சேற்றை பூசி, தலையில் தீர்த்தக்குடங்கள் சுமந்துகொண்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், திருஷ்டி கழிப்பது போல், குடங்களை போட்டு உடைத்து, வேண்டுதலை நிறைவேற்றினர். மாலையில் நடந்த, 108 பால்குட ஊர்வலத்தில், பெண்கள் பங்கேற்றனர். இரவு, 8 மணிக்கு சக்தி அழைத்தல் நடந்தது. இன்று காலை, பொங்கல் வைபவம், மாலையில் பக்தர்கள் அலகுகுத்துதல், மாவிளக்கு, அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து வருதல் ஆகியவை நடக்கிறது. அதேபோல், வீரபாண்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று காலை நடந்த பால்குட ஊர்வலத்தில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !