உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆர்.கே.பேட்டை: கிருஷ்ணர் கோவில்களில், யுகாதி (தெலுங்கு வருட பிறப்பை) முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. புது பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். எஸ்.பி.கண்டிகை, மதுராபுரம், சிங்கசமுத்திரம், நல்லுார் நரசு ராஜி கண்டிகை, பள்ளிப்பட்டு, கரிம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தெலுங்கு வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். புது வருட பிறப்பை ஒட்டி, புது பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. சிறப்பு பிரசாதமாக, வேப்பம் பூ, வெல்லம், ஏலக்காய் கலந்த பானகம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !