யுகாதியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :3114 days ago
வேலூர்: தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு, வேலூரில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. வேலூர், அண்ணா சாலையில் உள்ள திருமலை - திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள், வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உள்ள பெருமாளுக்கு, சந்தன அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது. முரளிதர சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆந்திரா மாநில எல்லையை ஒட்டி வேலூர் அமைந்துள்ளதால், இப்பகுதியில் ஏராளமானோர் யுகாதி பண்டிகையை உறவினர்களுக்கு விருந்தளித்து சிறப்பாக கொண்டாடினர்.