கரியகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED :3114 days ago
எலச்சிபாளையம்: பெரியமணலி, கரியகாளியம்மன் கோவிலில் நேற்று தேர்த்திருவிழா நடந்தது. எலச்சிபாளையம் அடுத்த, பெரியமணலி கரியகாளியம்மன் கோவிலில், கடந்த, 14ல் மாரியம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. கடந்த, 21ல் கரியகாளியம்மனுக்கு பூச்சாட்டல் நடந்தது. 24ல் கிராம சாந்தி; 25ல் கொடியேற்றம்; 28ல் சக்தி அழைத்தல்; நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு தேர் முக்கிய வீதிகளின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் ஓம்சக்தி, அரோகரா கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர். இன்று மாரியம்மன் தேர் விழா, நாளை சிவன், பெருமாள் புஷ்பரதம் வீதி உலாவும் நடக்க உள்ளது.