பெருமாள் கோவிலில் ஏப்., 5ல் ராமநவமி
ADDED :3114 days ago
சேலம்: பெருமாள் கோவிலில், வரும், 5ல், ராமநவமி உற்சவம் நடக்கிறது. சேலம், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ராமநவமி உற்சவம், வரும், 5ல் கோலாகலமாக நடக்கிறது. அன்று மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை, புருஷசுக்த ஹோமம் மற்றும் ஜெபம் நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 7:00 மணி வரை, ராமபிரானுக்கு திருமஞ்சன விழா, டாக்டர் விஜயலட்சுமி கண்ணன் குழுவினரின் பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. பின், மகா தீபாராதனை நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். லஷ்மிநரசிம்ம பக்த ஜனசபா, விழா ஏற்பாடுகளை செய்துவருகிறது.