ராமானுஜர் கோவில் குளம் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED :3112 days ago
காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவில் அனுஷ்டான குளம் புனரமைப்பு பணி, துவங்கியுள்ளது. ஸ்ரீராமானுஜரின், 1,000ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கு தனி கோவில் அமைந்துள்ளது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் முன், அனுஷ்டான குளம் உள்ளது. ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் இந்த குளத்தில் நீராடி, வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்தார் என, கூறப்படுகிறது. இந்த குளம் பல ஆண்டுகளாக துார்ந்து மரம் செடிகள் வளர்ந்து கிடந்தது. அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.