சிதம்பரேஸ்வரருக்கு பங்குனி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
நகரி: சிவகாமி சுந்திரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், பங்குனி மாத பிரம்மோற்சவம் விழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 12ம் தேதி வரை நடக்கிறது. சித்துார் மாவட்டம், நகரி நகராட்சியில், சத்திரவாடா கிராமத்தில், சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்கி, அடுத்த மாதம், 12ம் தேதி வரை நடக்கிறது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் உற்சவ மூர்த்தி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நிகழ்ச்சி நிரல்
தேதி நேரம் உற்சவம்
மார்ச் 30 காலை 7:00 மணி விநாயகர் அபிஷேகம்
மார்ச் 31 காலை 7:00 மணி அபிஷேகம்
ஏப். 1 இரவு 7:30 மணி சிம்ம வாகனம்
ஏப். 2 இரவு 7:30 மணி சூர்ய, சந்திர பிரபை
ஏப். 3 இரவு 7:30 மணி கற்பக விருட்சம்
ஏப். 4 இரவு 7:30 மணி நாக வாகனம்
ஏப். 5 இரவு 7:30 மணி நந்தி சேவை
ஏப். 6 இரவு 7:30 மணி அதிகார நந்தி உற்சவம்
ஏப். 7 இரவு 7:30 மணி ரத உற்சவம்
ஏப். 8 இரவு 7:30 மணி குதிரை வாகனம்
ஏப். 9 இரவு 7:30 மணி கைலாச வாகன உற்சவம்
ஏப். 10 காலை 7:00 மணி திருக்கல்யாணம்
ஏப். 11 இரவு 7:30 மணி விடையாற்றி உற்சவம்
ஏப். 12 காலை 7:00 மணி காரைக்கால் அம்மையார் அபிஷேகம்