மன்னீஸ்வரர் கோவிலில் ரூ.7 லட்சத்தில் புதிய ரதம்!
ADDED :5132 days ago
அன்னூர் : அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு புதியதாக ரதம் செய்யப்பட்டுள்ளது. மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமானுக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவில் புதியதாக ரதம் (சிறிய தேர்) செய்யப்பட்டுள்ளது. புதிய ரதத்தின் திருவுலா கோவிலின் உட்பிரகாரத்தில் வரும் 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், கே.ஜி.குரூப் ராமசாமி, செந்தில் குரூப் ஆறுமுகசாமி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை திருமுருகன் அருள் நெறிக்கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.