உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடுமிட்டான்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா

கடுமிட்டான்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா

மேலுார், மேலுார் அருகே கடுமிட்டான்பட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அய்யனாார் கோயில் திருவிழா நடக்கும். திருவிழாவின் முதல் நாளான நேற்று கடுமிட்டான்பட்டியில் இருந்து மந்தைக்கு புரவி மற்றும் பதுமை எனப்படும் சாமி சிலைகளை பக்தர்கள் கொண்டு வந்தனர். இரண்டாம் நாளான இன்று(மார்ச் 31) மந்தையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். அருக்கம்பட்டி, சாணிபட்டி, கேசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !